இந்தியா, ஜூன் 29 -- ஊதினால் அணைய நாம் என்ன தீக்குச்சியா?; உதயசூரியன் என திமுக நிர்வாகிகள் கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்து உள்ளார்.

திமுக தலைவரும், தமிழ்நாடு முதலமைச்சருமான திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் காணொலி காட்சி வாயிலாக நடைபெற்ற மாவட்டச் செயலாளர்கள் - தொகுதி பார்வையாளர்கள் - சார்பு அணிச் செயலாளர்கள் கூட்டத்தில் ஆற்றிய உரை.

ஓரணியில் தமிழ்நாடு - திமுகவுக்கான உறுப்பினர் சேர்க்கைக்காக மட்டுமல்ல; இது தமிழ்நாட்டின் மண், மொழி, மானம் காக்க எல்லோரையும் ஓரணியில் திரட்டுவதற்கான முயற்சி. ஓரணியில் தமிழ்நாடு' இயக்கத்தில் இணைந்தவர்களில் விருப்பம் உள்ளவர்கள் திமுகவில் உறுப்பினர்களாகவும் இணைவார்கள். சாதி, மதம், கட்சி சார்பு என எதையும் பார்க்காமல் தமிழ்நாட்டின் ஒவ்வொரு குடும்பத்தையும் நாம் சென்றடைய வேண்டும். தமிழ்நாட்டுக்கு இழைக்கப்படும...