கரூர்,சென்னை, செப்டம்பர் 30 -- கரூர் நெரிசலில் 41 பேர் மரணம் அடைந்தது தொடர்பாக, விஷம கருத்துக்களை சமூக வலைதளத்தில் பதிவு செய்ததாக, தவெக, பாஜக உள்ளிட்ட கட்சிகளை சேர்ந்தவர்களை தமிழக போலீஸ் கைது செய்து வருகிறது. அந்த வரிசையில், பிரபல ஊடகவியலாளர் பெலிக்ஸ் ஜெரால்டு கைது செய்யப்பட்டுள்ளார். அவரது கைதுக்கு அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்து, தன்னுடைய எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். இதோ அவருடைய பதிவு:

''பத்திரிகையாளர் திரு. பெலிக்ஸ் ஜெரால்டு அவர்கள் ஸ்டாலின் மாடல் அரசின் காவல்துறையால் இன்று அதிகாலையில் கைது செய்யப்பட்டிருப்பதாக செய்திகள் வருகின்றன. ஸ்டாலின் அரசுக்கு எதிராக யார் பேசினாலும் அவர்களுக்கு சிறை தான் பரிசு. இது ஒன்றும் புதிதல்ல.

தற்போது கரூர் துயரத்தில் திமுக அரசு மீது மக்கள் எழுப்பும் சந்தேகங்களை வெளிப்பட...