இந்தியா, ஜூன் 4 -- பல் நமது உடலில் முக்கியமான உறுப்பு ஆகும். நமது செரிமான மண்டலத்தில் முதல் உறுப்பாகவும் இந்த பற்கள் இருந்து வருகின்றன. தமிழில் 'பல் போனால் சொல் போகும்' என்ற கூற்று ஒன்று இருந்து வருகிறது. இதன் அடிப்படையில் நாம் பேசுவதற்கு முக்கிய ஆதாரமாக பற்கள் உள்ளன. இந்த பற்களை பாதுகாப்பது ஒவ்வொருவரின் முக்கிய கடமையாகும். பற்களை பாதுக்கப்பதால் உடலின் ஆரோக்கியத்தையும் பாதுகாக்கலாம். இத்தகைய பற்களில் வரக்கூடிய முக்கிய பிரச்சனை என்றால் பற் சொத்தை (Cavities) எனும் பாதிப்பு ஆகும். இது சிறியவர் முதல் பெரியவர் வரை வரும் பொதுவான பாதிப்பு ஆகும். இவை பெரும்பாலும் நாம் சாப்பிடும் உணவு துணுக்குகள் பற்களில் தங்கி விடுவதால் ஏற்படுகின்றன.

மேலும் படிக்க | பற்கள் அழகை மட்டுமில்லை.. ஆரோக்கியத்தையும் சொல்லும்.. தினமும் எப்படி பல் விலக்க வேண்டும் பாருங்க!...