இந்தியா, ஜூன் 22 -- இயக்குநர் வெற்றிமாறன் நடிகர் சூர்யாவுடன் கூட்டணி சேர்ந்து வாடிவாசல் எனும் படத்தை இயக்குவதாக அறிவித்தார். இந்தப் படம் சில ஆண்டுகளுக்கு முன் அறிவிக்கப்பட்ட சமயத்தில் இருந்தே படத்தின் எதிர்பார்ப்பு அதிகமானது. பின், படத்தின் படப்பிடிப்பு தொடங்கப்பட்டது என்றும் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது என்றும் வெவ்வேறான அறிவிப்புகள் வந்த வண்ணம் இருந்தன. ஒரு கட்டத்தில் படம் குறித்தான அப்டேட் இல்லாத காரணத்தால் படம் நின்று போனதாக பேசப்பட்டது.

இதற்கிடையே, அந்தப்படத்தின் தயாரிப்பாளர் கலைப்புலி தாணு மீண்டும் இருவரும் இணைவதை போட்டோ வெளியிட்டு உறுதிபடுத்தினார். இந்த நிலையில் இந்தப்படம் தற்போது மீண்டும் நிறுத்தப்பட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.

இந்த நிலையில் இது குறித்து பிரபல பத்திரிகையாளர் பிஸ்மி மீடியா சர்க்கிள் பேசி இருக்கிறா...