அரூர்,தர்மபுரி, அக்டோபர் 3 -- கரூர் நெரிசல் மரணத்திற்கு தவெக தலைவர் விஜய் மீது ஆளும் கட்சியினர் தொடர்ந்து குற்றம் சாட்டிவந்த நிலையில், 'பாதுகாப்பு குறைபாடுதான் இந்த மரணங்களுக்குக் காரணம், ஆளும் திமுக அரசுதான் பொறுப்பேற்க வேண்டும்' என்று முதன்முதலில் கூறியவர் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி.

அதோடு, விசாரணை ஆணையம் அமைத்த பிறகு அரசு அதிகாரிகள், காவல் துறை அதிகாரிகள், அரசியல்வாதிகள் தொடர் பேட்டிகள் கொடுப்பதைக் கண்டித்து சிபிஐக்கு வழக்கை மாற்ற வேண்டும் என்றும் கோரிக்கை வைத்தார்.

கரூர் சம்பவத்தையொட்டி தன்னுடைய எழுச்சிப்பயணத்தை ஒத்திவைத்திருந்த எடப்பாடி பழனிசாமி இன்று தர்மபுரி, பாப்பிரெட்டிப்பட்டி, அரூர் ஆகிய சட்டமன்றத் தொகுதிகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். இந்த தொகுதிகளில் நடைபெற்ற எழுச்சியுரையில் ஆங்காங்கே ஏராளமான விஜய் ரசிகர்கள் ...