இந்தியா, ஏப்ரல் 28 -- பணியாளர் பாதுகாப்பு மற்றும் ஆரோக்கியத்துக்கான உலக நாள் ஏப்ரல் 28ம் தேதி கடைபிடிக்கப்படுகிறது. இந்த நாள் பணி தொடர்பான விபத்துக்கள் மற்றும் வியாதிகளை தடுப்பதற்காக அர்ப்பணிக்கப்பட்டுள்ளது.

அனைத்து பணியாளர்களுக்கும் பாதுகாப்பு மற்றும் ஆரோக்கியமான பணிச்சூழலை உலகளவில் உறுதியளிப்பது இந்நாளின் நோக்கமாகும்.

பணியாளர்கள், தொழிலாளிகள் மற்றும் அரசுகளுக்கு இந்த நாள், ஒரு வாய்ப்பைக் கொடுக்கிறது. அவர்கள் ஒன்றிணைந்து, பாதுகாப்பான பணியிடத்தை உருவாக்குவதற்கு தேவையான முயற்சிகளை எடுக்கவேண்டும். இந்த நாளின் வரலாறு மற்றும் முக்கியத்துவம் குறித்து மேலும் தெரிந்துகொள்வோம்.

தற்போது ஏற்பட்ட தொற்று கால சூழலில் பணியிடத்தில் பாதுகாப்பு மற்றும் ஆரோக்கியத்துக்கான உலக நாளின் முக்கியத்துவம் உணரப்படுகிறது. பணியிடத்தில் விபத்துக்கள் மற்றும் தொற்றுகள...