இந்தியா, ஏப்ரல் 28 -- கோடை காலம் தொடங்கிவிட்டதால் உடலையும், மனதையும் ரிலாக்ஸாக வைத்துக்கொள்ள பலரும் நீச்சல் குளத்துக்கு படையெடுப்பதுண்டு. நீச்சல் பயிற்சி உடல் எடையை குறைப்பதற்கும் சிறந்த பயிற்சியாக உள்ளது.

அதேபோல் உடல் ரீதியான செயல்பாட்டை ஊக்குவிப்பதற்கு பலரும் சைக்கிள் பயிற்சியை மேற்கொள்வதுண்டு. இதை செய்வதால் உடல் செயல்பாட்டை வெளிப்படுத்துவதோடு, இயற்கையையும் ரசித்து புத்துணர்ச்சி அடையலாம். சைக்களிங் செய்வதால் உடல் எடை குறையும் என்கிற நம்பிக்கையும் பலரிடம் இருந்து வருகிறது.

நீச்சல் என்பது உடல் செயல்பாடுகளின் வடிவமாக இருக்கிறது. இது கைகால்களைப் பயன்படுத்தி நீரின் மூலம் தன்னைத்தானே செலுத்துவது, அதாவது கால்களை உதைப்பதும், கைகளை தண்ணீருக்குள் இழுப்பதுமாக உள்ளது. நீச்சலில் ஃப்ரீஸ்டைல், பிரஸ்ட் ஸ்ட்ரோக், பேக் ஸ்ட்ரோக் மற்றும் பட்டாம்பூச்சி...