இந்தியா, ஏப்ரல் 20 -- இயக்குநர் விநாயக் வைத்தியநாதன் இயக்கத்தில் விஜய் ஆண்டனி முதன்மை கதாபாத்திரத்தில் நடித்து, கடந்த ஏப்ரல் 11ம் தேதி வெளியான திரைப்படம் ரோமியோ. இந்தப்படத்தில் மிர்ணாலினி ரவி, ஷா ரா, விடிவி கணேஷ் மற்றும் யோகி பாபு உள்ளிட்ட பலர் நடித்து இருக்கின்றனர். பரத் தனசேகர் இந்தப்படத்திற்கு இசையமைத்து இருக்கிறார்.

இந்தப்படம் குறித்து பிரபல விமர்சகரான புளூ சட்டை மாறன் தன்னுடைய யூடியூப் தளத்தில் நெகட்டிவான விமர்சனங்களை முன்வைத்த நிலையில், அதற்கு விஜய் ஆண்டனி பதிலடி கொடுத்திருக்கிறார்.

அதில், " பல நல்ல படங்களை தவறாக விமர்சித்துக்கொல்லும் திரு புளு சட்டை மாறன் போன்ற சிலருக்கும், அவர்கள் சொல்வதையெல்லாம் உண்மை என்று நம்பி, ரோமியோ போன்ற நல்ல படங்களை கொண்டாடாமல் தமிழ் சினிமாவை குறை சொல்லும் அறிவு ஜீவிகளுக்கும் எனது ஆழ்ந்த அனுதாபங்கள். என்...