இந்தியா, மே 3 -- எம்ஜிஆர், சிவாஜி கணேசன் ஆகியோருக்கு ஏராளமான சூப்பர் ஹிட் படங்களை கொடுத்த ஏ.சி. திருலோகசந்தர் இயக்கிய முதல் படம் வீரத்திருமகன். சி.எல். ஆனந்தன் ஹீரோவாக நடிக்க, ஈ.வி. சரோஜா, சச்சு, எஸ்.ஏ. அசோகன் ஆகியோர் பிரதான கதாபாத்திரங்களில் நடித்து இந்தப் படம் வெளியானது.

ஏவிஎம் நிறுவனம் பிரமாணட் தயாரிப்பில் வெளியான மே 3ஆம் தேதி வெளியான இந்தப் படம் ரசிகர்களை பெரிதும் கவர்ந்து சூப்பர் ஹிட்டும் ஆகியது.

இந்த படத்தை எடுப்பதற்கு முன்பு இரண்டு கதைகளுடன் ஏ.சி. திருலோகசந்தர், ஏவிஎம் செட்டியாரை பார்த்துள்ளார். அவரது இரண்டு கதைகளுக்கு ஒகே சொன்ன செட்டியார், ஒரு கதையை பார்த்தால் பசி தீரும் என்ற பெயரில் சிவாஜி நடிக்க பீம்சிங் இயக்கத்தில் தயாரித்து ஹிட்டாக்கினார்.

இன்னொரு படமாக உருவாகிய வீரத்திருமகன் படத்தை அந்த காலகட்டத்திலேயே பிரமாண்டமாக உருவா...