இந்தியா, பிப்ரவரி 21 -- அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட ஏ.வி.ராஜுவுக்கு அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ வெங்கடாசலம் வக்கீல் நோட்டீஸ் அனுப்பி உள்ளார்.

அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட ஏவி.ராஜூ, சில நாட்களுக்கு முன்னர் அளித்த பேட்டியில், அதிமுகவில் எம்.எல்.ஏவாக இருந்த வெங்கடாஜலம், கூவத்தூரில் செய்த சேட்டைகள் பற்றி, அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட ஏ.வி.ராஜூ பேட்டிகொடுத்துள்ளார். அதில், 'அதிமுகவில் ஒரு சாதாரண எம்.எல்.ஏ.வாக இருந்த வெங்கடாஜலம் கூவத்தூரில் இருக்கும்போது தன்னுடன் பொழுதைக் கழிக்க நடிகை த்ரிஷா வேண்டும் என்று அடம்பிடித்தார்.

நான் கூவத்தூரில் இருக்கும் வெங்கடாஜலத்தைப் பார்க்கப்போனேன். வெங்கடாஜலம் மது குடிக்க மாட்டார். ஆனால், அதற்குப் பதிலாக கூவத்தூரில் இருக்குபோது த்ரிஷாவை வேண்டும் என்று கேட்டு அடம்பிடித்தார். இது நடிகர் கருணாஸுக்கு தெரியும்...