இந்தியா, ஏப்ரல் 28 -- ஒவ்வொரு ராசிகளுக்கும் 2024 ஆம் ஆண்டு ஏப்ரல் 28 ஆம் தேதியான இன்றைய நாள் எப்படி இருக்கும் என்பதை பற்றி இங்கு தெரிந்து கொள்ளலாம்.

மேஷம்

திறமைகளை வெளிப்படுத்திப் பாராட்டுகளை பெறுவீர்கள். உயர் அதிகாரிகளிடத்தில் அளவுடன் இருக்கவும். மனதில் புதுவிதமான தேடல் பிறக்கும். கோபத்தை குறைத்துக் கொள்வது நல்லது. வெளியூர் தொடர்பான பயணங்கள் கைகூடும். பொறுமை வேண்டிய நாள்.

ரிஷபம்

மறைமுகமான சில தடைகளால் காலதாமதம் ஏற்படும். உத்தியோகப் பணிகளில் பொறுப்பும், அலைச்சலும் உண்டாகும். உயர் கல்வி குறித்த செயல்பாடுகளில் பொறுமை காக்கவும். மனதில் வித்தியாசமான கற்பனைகள் மேம்படும்.

மிதுனம்

ஆரோக்கியம் தொடர்பான பிரச்சனைகள் குறையும். சிந்தனைகளில் தெளிவு உண்டாகும். எதிர்பாலின மக்களால் அனுகூலம் ஏற்படும். சுபகாரிய முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். உறவினர...