இந்தியா, மே 2 -- TNPSC Group 4: தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் சார்பாக, நடத்தப்படும் குரூப் 4 மற்றும் வி.ஏ.ஓ. தேர்வுக்குப், பலர் பயின்று வருகின்றனர்.

இந்நிலையில் அரசியலமைப்புப் பகுதியில் சராசரியாக 11 மதிப்பெண்கள் வரை கேட்கலாம் என நிபுணர்கள் கூறுகின்றனர். எனவே, அரசியலமைப்புப் பகுதி என்பது மிகவும் எளிமையான பகுதி என்பதால் இன்றும் அதில் இருந்து இந்த டி.என்.பி.எஸ்.சி. குரூப் 4க்காக தெரிந்துகொள்ளவேண்டிய பகுதிகளை சிறு சிறு குறிப்புகளாகப் பார்ப்போம்.

சட்டமன்ற மேலவை மற்றும் சட்டமன்ற பேரவை ஆகிய ஈரவைகளையும் கொண்ட மாநிலங்கள் ஆந்திரப் பிரதேசம், தெலங்கானா, கர்நாடகா, பீஹார், மகாராஷ்டிரா, உத்தரப்பிரதேசம் ஆகியவையாகும்.

தமிழ்நாட்டில் எத்தனை அமைச்சர்கள் இருக்கலாம்?: தமிழ்நாட்டில் உள்ள மொத்த சட்டப்பேரவை உறுப்பினர்களின் எண்ணிக்கையில், 15 விழுக்க...