இந்தியா, மார்ச் 18 -- TNPSC Group 4: தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் சார்பாக, நடத்தப்படும் குரூப் 4 மற்றும் வி.ஏ.ஓ. தேர்வுக்குப், பலர் பயின்று வருகின்றனர். இந்நிலையில் புவியியல் பகுதியில் சராசரியாக 8 மதிப்பெண்கள் வரை கேட்கலாம் என நிபுணர்கள் கூறுகின்றனர். எனவே, புவியியல் பகுதி என்பது மிகவும் எளிமையான பகுதி என்பதால் இன்றும் அதில் இருந்து இந்த டி.என்.பி.எஸ்.சி. குரூப் 4க்காக தெரிந்துகொள்ளவேண்டிய பகுதிகளை சிறு சிறு குறிப்புகளாகப் பார்ப்போம்.

பூமியின் சுழற்சி வேகம்: பூமியின் சுழற்சி வேகம், நிலநடுக்கோட்டுப் பகுதியில் 1670 கி.மீ/ மணி ஆகவும்; 60 டிகிரி வடக்கு அட்சரேகையில் 845 கி.மீ./மணி ஆகவும், துருவப் பகுதியில் ஜீரோவாகவும் உள்ளது.

மங்கள்யான்: இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் எனப்படும்(ISRO), செவ்வாய்க் கோளின் வளிமண்டலம் மற்றும் தரை...