இந்தியா, மார்ச் 2 -- மக்களவைத் தேர்தல் தொடர்பாக பாஜக மற்றும் தமாகா இடையேயான பேச்சுவார்த்தை இன்று நடைபெற்றது. தொகுதி பங்கீடு தொடர்பாக பாஜக சார்பில் முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், எம்எல்ஏக்கள் நயினார் நாகேந்திரன் மற்றும் வானதி சீனிவாசன் ஆகியோர் தமாகா தலைவர் ஜி.கே.வாசனை சந்தித்து ஆலோசனை நடத்தினர்.

ஆலோசனைக்கு பின் செய்தியாளர்களைச் சந்தித்த ஜி.கே.வாசன், "தமிழ் மாநில காங்கிரஸ், பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் அங்கம் வகிக்கும். பாஜக - தமாகா இடையேயான முதல் சந்திப்பே ஆக்கபூர்வமான சந்திப்பாக அமைந்தது. தேர்தல், களப்பணி, வெற்றி வியூகம் தொடர்பாக இந்த சந்திப்பில் பொதுவாக பேசினோம்.

குறிப்பாக தமாகா தேர்தல் குழு அமைத்த பின்னர் தொகுதி பங்கீடு குறித்து ஆலோசனை நடத்தப்படும். மார்ச் 4 முதல் 6 வரை தமாகா விருப்ப மனு பெறவிருக்கிறது. அ...