இந்தியா, ஏப்ரல் 30 -- Thug Life: தக் லைஃப் படத்தில் சிம்பு இணைந்ததையடுத்து நடிகர் ஜெயம் ரவி, துல்கர் சல்மான், சித்தார்த் விலகியதற்கான காரணம் குறித்து மூத்த பத்திரிக்கையாளர் வி.கே.சுந்தர் சில விஷயங்களை வெளிப்படுத்தி உள்ளார்.

ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல், மெட்ராஸ் டாக்கீஸ் மற்றும் ரெட் ஜெயன்ட் மூவிஸ் இணைந்து தயாரிக்கும் படம், தக் லைஃப். நடிகர் கமல்ஹாசன், சிலம்பரசன், த்ரிஷா, அபிராமி, நாசர், கவுதம் கார்த்திக், ஐஸ்வர்யா லெக்‌ஷ்மி, ஜோஜூ ஜார்ஜ் உள்ளிட்டப் பலர் நடித்துவருகின்றனர்'. ஒளிப்பதிவாளர் ரவி கே.சந்திரன் ஒளிப்பதிவு செய்ய, படத்தொகுப்பாளர் ஸ்ரீதர் பிரசாத் எடிட் செய்ய, ஏ.ஆர்.ரஹ்மான் இப்படத்துக்கு இசையமைக்கிறார். இப்படத்தை மணிரத்னம் எழுதி இயக்குகிறார்.

'தக் லைஃப்' படத்தின்மூலம் 36 ஆண்டுகளுக்குப் பின்னர் கமல்ஹாசன் மற்றும் மணிரத்னம் ஆகியோர் ...