இந்தியா, மார்ச் 11 -- Suryakiran Passed Away: பிரபல சீரியல் நடிகை சுஜிதாவின் அண்ணனும், தமிழில் குழந்தை நட்சத்திரமாக பல படங்களில் நடித்தவருமான மாஸ்டர் சுரேஷ், மஞ்சட்காமாலையால் பாதிக்கப்பட்டு சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார்.

தமிழில் கல்லுக்குள் ஈரம், படிக்காதவன், மெளனகீதங்கள், கடல் மீன்கள், ரங்கா, டார்லிங் டார்லிங் டார்லிங், நீதியின் மறுபக்கம், மங்கம்மா சபதம், மனிதன், வேலைக்காரன் போன்ற படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்தவர், மாஸ்டர் சுரேஷ். குறிப்பாக, படிக்காதவன் படத்தில் சிறுவயது ரஜினியாக நடித்து, செம ஸ்டைல் காட்டி பிரபலமானவர். இவர் சிறுவயது முதல் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய தென்னிந்திய மொழிகளில் 200க்கும் அதிகமான குழந்தை நட்சத்திர வேடங்களில் நடித்து கலக்கியிருக்கிறார்.

குழந்தை நட்சத்திரத்துக்காக இரண்டு முறை தேசிய விருது ப...