இந்தியா, ஏப்ரல் 27 -- ஜாதகத்தில் சுக்கிரனின் சக்தி என்ன? காமத்தில் அவனது பங்கு எத்தகையது என்பது குறித்து ஜோதிடர் கஜேந்திரன் ஒன் டு ஒன் சேனலுக்கு பேசி இருக்கிறார்.

இது குறித்து அவர் பேசும் போது, " எந்த உயிரினமாக இருந்தாலும், அது தனியாக இருந்தால், எந்தவித பயனும் கிடையாது. ஒரு இடத்தில் பாசிட்டிவும், நெகட்டிவும் சேர்ந்தால்தான் புது உயிரானது உருவாகும்.

பெண்ணால் ஆணுக்கு மகிழ்ச்சி; ஆணால் பெண்ணுக்கு மகிழ்ச்சி. இது எல்லா உயிரினங்களுக்கும் பொது. காமம் தொடர்பான எல்லா விதமான மகிழ்ச்சியையும் கொடுக்கக்கூடியது சுக்கிரன்தான். சுக்கிரன் இல்லாவிடில், இந்த உலகத்தில் இனப்பெருக்கம் என்ற ஒன்று இருக்கவே இருக்காது. மகிழ்ச்சி என்ற ஒன்றும் இருக்காது.

அதனால் தான் சுக்கிரனை களத்திர காரகன் என்று சொல்கிறார்கள். சுக்கிரன் திருமணத்தை தீர்மானிக்கக்கூடிய ஒரு கிரகமாகும்...