இந்தியா, ஏப்ரல் 26 -- Shruti Haasan - Santanu Hazarika Broken Up: நடிகை ஸ்ருதி ஹாசனும், அவரது நீண்டகால காதலரும், டூடுல் கலைஞரும் ஓவியருமான சாந்தனு ஹசாரிகாவும், தங்களது காதலை முறித்துக்கொண்டதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன.

நடிகை ஸ்ருதிஹாசன், கமல்ஹாசன் மற்றும் சரிகா தம்பதியினரின் மூத்தமகள் ஆவார். 38 வயதாகும் ஸ்ருதிஹாசன் 2011ஆம் ஆண்டு, வெளியான 7ஆம் அறிவு திரைப்படம் மூலம் தமிழில் கதாநாயகியாக அறிமுகம் ஆனார். அதன்பின், 3, பூஜை, புலி, வேதாளம், சிங்கம் 3, புத்தம் புது காலை, லாபம் ஆகியப் படங்களில் நடித்துள்ளார். தவிர, ஸ்ருதிஹாசன், தெலுங்கு மற்றும் இந்தி படங்களிலும் பிஸியாக நடித்து வருகிறார். அதில் அனகனகா ஓ தீரடு, ஓ மை ஃபிரெண்ட், கபர் சிங், பலுப்பு, ராமய்யா வஸ்தவ்வய்யா, எவடு, ரேஸ் குர்ரம், அகடு, ஸ்ரீமந்துடு, பிரேமம்(தெலுங்கு), கி...