இந்தியா, ஏப்ரல் 21 -- Revolutionary Poet Bharathidasan: அழகின் சிரிப்பு, இருண்ட வீடு, எதிர்பாராத முத்தம், கண்ணகி புரட்சிக் காப்பியம், குடும்ப விளக்கு, குமரகுருபரர்,பாண்டியன் பரிசு, பிசிராந்தையார், பாரதிதாசன் ஆத்திசூடி ஆகியப் பல நூல்களை எழுதியவர், கவிஞர் பாரதிதாசன். 1964, ஏப்ரல் 21, இதே நாளில் சென்னையில் மறைந்தார். இவரைப் பற்றி அறிய சுவாரஸ்யமான விஷயங்கள் உள்ளன. வாருங்கள் பார்ப்போம்.

யார் இந்த கவிஞர் பாரதிதாசன்?1891ஆம் ஆண்டு, ஏப்ரல் 29ஆம் தேதி புதுச்சேரியில் கனகசபை மற்றும் லட்சுமி தம்பதியினருக்கு மகனாகப் பிறந்தவர், பாரதிதாசன். இவரது இயற்பெயர் கனகசுப்புரத்தினம். சிறுவயது முதலே தமிழ் மீது பற்றுகொண்டிருந்த கனகசுப்புரத்தினம், புதுச்சேரி கல்வே கல்லூரியில் தமிழ்ப் புலமைப் பெற்றார். முதல் இரண்டாண்டுகளில் கல்லூரியிலேயே முதலாவதாக தேர்ச்சி பெற்றதால்...