இந்தியா, ஏப்ரல் 24 -- Ranveer Singh: நடிகர் ரன்வீர் சிங் காங்கிரஸுக்கு வாக்களிக்குமாறு கேட்டுக்கொண்டதாகத் தோன்றிய டீப்ஃபேக் வீடியோவைப் பதிவேற்றிய எக்ஸ் பயனர் மீது மகாராஷ்டிரா காவல்துறையின் சைபர் க்ரைம் பிரிவு மூலம் எஃப்.ஐ.ஆர் பதிவு செய்துள்ளனர்.

நடிகர் ரன்வீர் சிங்கின் தந்தை ஜக்ஜித் சிங் பாவ்னானி அளித்தப் புகாரின்பேரில், டீப் ஃபேக் வீடியோவை பரப்பிய இந்திய காங்கிரஸ் கட்சியுடைய தெலங்கானா மாநில செய்தித்தொடர்பாளர் சுஜாதா பால் மீது முதல் தகவல் அறிக்கை (எஃப்.ஐ.ஆர்) பதிவு செய்யப்பட்டுள்ளது.

ஃபேஷன் ஷோ ஒன்றை விளம்பரப்படுத்த, உத்தரப்பிரதேசத்தின் வாரணாசியில் ரன்வீர் சிங் இருந்தபோது, ஊடகங்களுக்கு பேட்டி அளித்ததாகவும், பிரதமர் நரேந்திர மோடியை பாராட்டியதாகவும் தெரிகிறது.

அந்தப் பேட்டியில், "நமது வளமான கலாசாரம், பாரம்பரியம், வரலாறு மற்றும் மரபைக் கொண...