இந்தியா, ஏப்ரல் 24 -- லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி இருக்கும் கூலி திரைப்படத்தின் டீசர் நேற்று வெளியானது. அது குறித்து பிரபல பத்திரிகையாளரான வலைப்பேச்சு அந்தணன் பேசி இருக்கிறார்.

இது குறித்து அவர் பேசும் போது, " தமிழில் வெளியான கூலி திரைப்படத்தை பொருத்தவரை, அந்தப் படத்தில் கதாநாயகனாக நடிகர் சரத்குமார் நடித்திருந்தார். அந்த படம் பெரிதளவில் வெற்றி பெறவில்லை.

கூலி என்ற பெயரில் அமிதாப்பச்சன் ஹிந்தியில் படம் நடித்தார். அந்த படத்தின் படப்பிடிப்பின் போது, மிகப்பெரிய விபத்து ஒன்றை அவர் எதிர்கொண்டார். ஆம், படத்தின் படப்பிடிப்பு கர்நாடகாவில் நடந்து கொண்டிருந்தது.

ஒரு சண்டைக்காட்சியின் போது, அந்தப் படத்தின் ஃபைட் மாஸ்டர் அமிதாப்பை எட்டி உதைக்க வேண்டும், அமிதாப் அங்கு இருக்கக்கூடிய நாற்காலியில் இடித்து விழ வேண்டு...