இந்தியா, ஏப்ரல் 20 -- Rajini 171st Film Title: இயக்குநர் லோகேஷ் கனகராஜ், ரஜினிகாந்தினை வைத்து இயக்கும் படத்தின் டைட்டில் தொடர்பான டீஸர் இன்னும் இரண்டு நாட்களில் வெளியாகும் என தயாரிப்புக் குழுவான சன்பிக்சர்ஸ் தெரிவித்துள்ளது.

இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், அனிருத் இசையமைத்து, சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் திரைப்படத்தில் ரஜினிகாந்த் ஹீரோவாக நடிக்கயிருக்கிறார். இப்படம் ரஜினிகாந்தின் திரை வரிசையில் 171ஆவது படமாக வருகிறது. இப்படத்தில் சண்டைக் காட்சிகளை அன்பறிவ் செய்ய இருப்பதால், படத்தில் ஆக்‌ஷன் காட்சிகள் அதிரடியாக இருக்கும் எனக் கூறப்படுகிறது.

சமீபத்தில் படக்குழு, ரஜினிகாந்தின் 171ஆவது படம் குறித்த போஸ்டரை மார்ச் 28ஆம் தேதி வெளியிட்டது. அதில் ரஜினிகாந்தின் 171ஆவது படத்தின் டைட்டிலை, ஏப்ரல் 22ஆம் தேதி வெளியிடுவதாக படக்குழு அறிவித்து இருந்...