இந்தியா, மே 2 -- தென்னிந்திய சினிமாவில் திரைப்பட இயக்குநர், நடிகர், தயாரிப்பாளர் என பன்முகம் கொண்ட நபராக வலம் வரும் பிரபு தேவா இன்று 100 நிமிடங்கள் 100 பிரபுதேவா பாடல்கள் நிகழ்ச்சிக்கு வருவதாக இருந்தது. கடைசி நேரத்தில் அவர் நிகழ்ச்சிக்கு வராததால் அங்கு காத்திருந்த பெற்றோர் கடும் அதிருப்தி அடைந்தனர். இதையடுத்து நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களுக்கும் பெற்றோருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதால் அப்பகுதியில் பரபரப்பான சூழல் ஏற்பட்டது.

இந்தியன் மைக்கேல் ஜாக்சன் என்று அழைக்கப்படுபவர் பிரபு தேவா. அவர் கிட்டத்தட்ட 32 ஆண்டுகளாக திரைத்துறையில் வேலை செய்து வருகிறார். தென்னிந்திய சினிமாவில் நடன இயக்குனராக இருந்த பிரபு தேவாவுக்கு நடனத்தின் மீது காதல் இருந்தது. பிரபு தேவா பின்னர் பரதநாட்டியம் மற்றும் பல்வேறு மேற்கத்திய நடன வடிவங்களைக் கற்றுக் கொண்டார், இறுத...