இந்தியா, ஏப்ரல் 28 -- உங்கள் குழந்தைகள் புத்தங்களை வாசிக்க வேண்டுமென விரும்பினால், நீங்கள் இதைப்படித்து முதலில் தெரிந்துகொள்ளுங்கள்.

பெற்றோர் எப்போதும் தங்கள் குழந்தைகளுக்கு சிறப்பான ஒன்றையே தர விரும்புவார்கள். குழந்தைகளிடம் நல்ல பழக்கங்களை வளர்க்க விரும்புவார்கள்.

அதில் புத்தக வாசிப்பு முக்கியமானது. புத்தக வாசிப்பு என்ற பழக்கத்தை உங்கள் குழந்தைகளிடம் எப்போதும் வளர்த்தெடுக்க வேண்டுமென்றால், அதற்கு நீங்கள் என்ன செய்யவேண்டும்?

புத்தகத்ததை விரும்பும் பெற்றோர், தங்கள் குழந்தைகளும் வாசிப்பு பழக்கத்தை கைகொள்ள வேண்டும் என்று விரும்புவார்கள். குழந்தைகள் தங்களின் ஆரம்ப கால வயதிலே வாசிக்கத் துவங்குவது நல்லது.

அதற்கு பெற்றோர் அவர்களுக்கு நிறைய புத்தகங்களைக் கொடுக்க வேண்டும். மேலும் வாசிப்பதற்கான வசதி, வாய்ப்புக்களை பெற்றோர்தான் ஏற்படுத்திக்கொடுக...