இந்தியா, மார்ச் 15 -- Actress Nithya Menen: நடிகை நித்யா மேனன், காதலில் தோல்வியுற்ற பெண்ணாக புதிய படத்தில் நடிக்க கமிட் ஆகியுள்ளார்.

கர்நாடகாவில் பெங்களூரு நகரில் மலையாளி பெற்றோருக்கு மகளாகப் பிறந்தவர், நித்யா மேனன். பள்ளிப்படிப்பை பெங்களூருவில் இருக்கும் பூர்ணா பிரஜனா பள்ளியிலும், மவுன்ட் கார்மல் கல்லூரியிலும் படித்துமுடித்தவர். சிறுவயதில் பைலட் ஆக ஆசைப்பட்ட நித்யா மேனன், 1998ஆம் ஆண்டு அனுமன் என்னும் படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்தார். பின், கன்னடத்தில் 2006ஆம் ஆண்டு 7'0 கிளாக், மலையாளத்தில் ஆகாஷ கோபுரம் ஆகியப் படங்களில் நடித்தார். அதன்பின், ஜோஷ்,வெள்ளத்தூவல், கேரள கஃபே, ஏஞ்சல் ஜான், அபூர்வாராகம், அன்வர், உருமி, ஆகிய மலையாளப் படத்திலும் பிரதான கதாபாத்திரத்தில் நடித்தார். அதன்பின், 2011ஆம் ஆண்டு தமிழில் சித்தார்த்துடன் 180 என்னும் ப...