இந்தியா, மே 2 -- Music Director Ilayaraja: மொரிஷியஸ் நாட்டுக்கு சுற்றுலா சென்றுள்ள இசையமைப்பாளர் இளையராஜா, தன் படத்தைப் பகிர்ந்துள்ளார். அது வைரல் ஆகியுள்ளது.

தமிழ் சினிமாவின் மூத்த இசையமைப்பாளர், இளையராஜா. அன்றைய பிரிக்கப்படாத மதுரை மாவட்டத்தில் (தற்போது தேனி மாவட்டம்) உள்ள பண்ணைப்புரம் என்னும் கிராமத்தில் பிறந்தவர். 'அன்னக்கிளி' என்னும் தமிழ்ப் படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமாகி மலையாளம், கன்னடம், தெலுங்கு, இந்தி எனப்பல்வேறு மொழிகளில் இசையமைத்து ஹிட்டடித்தவர். இவரது 1000-ஆவது படமாக, இயக்குநர் பாலாவின் இயக்கத்தில் வெளிவந்த 'தாரை தப்பட்டை' இருந்தது.

சமீபத்தில் இசையமைப்பாளர் இளையராஜாவின் மகளும் பின்னணிப் பாடகியுமான பவதாரிணி உடல் நலக்குறைவு காரணமாக, ஜன.25 மாலை 5.20 மணிக்கு இலங்கையில் காலமானார். இரைப்பை புற்றுநோய் காரணமாக ஆயுர்வேத சிகிச்...