இந்தியா, ஏப்ரல் 18 -- Mercury Rising In Pisces: பகுத்தறிவு மற்றும் சமயோசித உணர்வு ஆகியவற்றின் காரண கர்த்தாவாக விளங்கக் கூடியவர், புதன் பகவான். இவர் தனது ஆளுகையை மிதுனம் மற்றும் கன்னி ராசியில் செலுத்தக் கூடியவர். ஜாதகத்தில் புதன் பகவான் பலவீனமடைந்தால் ஏராளமான பிரச்னைகளை சந்திப்பீர்கள். வரக்கூடிய ஏப்ரல் 19ஆம் தேதியான நாளை, காலை 10:23 மணிக்கு மீன ராசியில் புதன் பகவான் உதித்து வருகிறார். இந்த காலத்தில் சில ராசியினர் மிகப்பெரிய நஷ்டங்களைச் சந்திக்கின்றனர்.

மேஷம்: இந்த ராசியினருக்கு புதன் பகவான் மீன ராசியில் உதிப்பதால் வரக்கூடிய வருவாய் வராமல் போகலாம். கஷ்டப்பட்டு சம்பாதித்த பணத்தினை யாரிடமும் வட்டிக்கு ஆசைப்பட்டு கடனாக கொடுத்துவிடாதீர்கள். இக்காலத்தில் கொடுத்தால் கொடுத்த பணத்தை மீட்பது கடினம். இந்த காலத்தில் வரவுக்கு ஏற்ப செலவு செய்யப் பழகுங்...