இந்தியா, ஏப்ரல் 27 -- Massage Benefits: இன்றைய காலங்களில் பணி மற்றும் வாழ்க்கை சமநிலையை சரிசெய்வது என்பது நம்மில் பலருக்கும் சவாலான காரியமாக இருக்கிறது. இதன் விளைவு, நம் மனம், உடல் ஆகியவற்றை சோர்வாக உணரவைத்துவிடுகிறோம்.

நீண்டநேரம் ஒரே இடத்தில் அமர்ந்து பணிபுரிவது நமது உடலில் வெப்பத்தை அதிகரித்து நம்மை நோய்க்குள் தள்ளி விடும்.

இதனைத் தடுக்க, குணப்படுத்த மனித தொடுதல் நம் உடலுக்கு நல்லவிதமான பலன்களைத் தருகின்றன. ஒருவரின் மன பதற்றத்தைக் குறைப்பதற்கும், தூக்கத்தை மேம்படுத்துவதற்கும், உடலையும் மனதையும் லேசாக உணரவைக்கவும், பல்வேறு உடல்சார்ந்த பிரச்னைகளைத் தீர்க்கவும் மசாஜ் நுட்பங்கள் பயன்படுகின்றன.

பொதுவாக மசாஜ் செய்வதால் ஏற்படும் நன்மைகள்: உடலில் தசை வலி மற்றும் தசைப் பிடிப்பினை நீக்குகிறது. உடலில் நெகிழ்வுத்தன்மை மற்றும் இயக்க வரம்பை அதிகரி...