இந்தியா, மார்ச் 29 -- ஏ.ஆர்.ரஹ்மானின் மகளான கதீஜா ரஹ்மான் தன்னுடைய பர்சனல் பக்கங்கள் குறித்து அண்மையில் வாவ் லைஃப் சேனலுக்கு கொடுத்த பேட்டியில் பகிர்ந்து இருக்கிறார்.

இது குறித்து அவர் பேசும் போது, "என்னுடைய குரல் நன்றாக இருக்கிறது என்று நீங்கள் சொல்லும் பொழுது, நாங்கள் நிச்சயமாக அதற்காக உழைக்கிறோம் என்பது ஒரு பக்கம் இருந்தாலும், நான் எனக்கு மிகவும் உண்மையாக இருக்கிறேன் என்பது இங்கு மிகவும் முக்கியமானது.

நான் முதலில் எனக்கு உண்மையாக இருக்க முயற்சி செய்கிறேன். நான் பொய்யாக வாழ விரும்பவில்லை. நீங்கள் உங்களுக்கு உண்மையாக இருக்கும் பொழுது, சில விஷயங்கள் தானாகவே வெளிப்படும் என்று நான் நினைக்கிறேன்.

எனக்கு பொய்யாக வாழ வேண்டும் என்ற எண்ணம் இல்லை. காரணம், வாழ்க்கை என்பது மிக மிக குறுகியது. நான் என்னுடைய வாழ்க்கையில் இந்த விஷயங்களை செய்யாமல் வி...