இந்தியா, பிப்ரவரி 23 -- ஜோதிடத்தில் யோகம் என்ற சொல்லுக்கு சேர்க்கை என்று பொருள்படுகிறது. குரு பகவானும், கேது பகவானும் கூடி நிற்கும் இடத்தில் கேள யோகம் உண்டாகிறது. இயற்கை சுபர் என அழைக்கப்படும் குரு பகவான் யாருடன் சேர்ந்தாலும், பெரிய பாதிப்புகளை ஏற்படுத்தமாட்டார். தனத்திற்கு காரகமான குரு பகவான் யாருடன் சேர்ந்தாலும் பொருள் ஈட்டுவதற்கான வழிகளையும், சாமர்த்தியத்தையும் ஜாதகத்திற்கு கற்றுக் கொடுத்துவிடுவார்.

பொருள் ஈட்டுபோது சிக்கனமாகவும், நேர்மையாகவும் இருப்பதற்கு குரு பகவான் வழிகாட்டுவார். ஒரு ஜாதகத்தில் குரு பகவான் வலுப்பெருவது மிகப்பெரிய நன்மையைத் தரும்.

இறை நம்பிக்கை, தெளிந்த ஞானம், தெளிந்த அறிவை கொண்டுக்க கூடிய கிரகமாக கேது விளங்குகிறார். குரு, கேது இணைவு என்பது இருவரும் சேர்ந்து இருந்தால் மட்டுமே கிடக்க கூடியது, பார்வையால் வருவது அல்ல....