இந்தியா, மார்ச் 10 -- மஞ்சும்மல் பாய்ஸ் தமிழகம் மட்டுமின்றி கேரளாவிலும் ஹிட் ஆகி உள்ளது. இதையடுத்து கமல் ஹாசன் நடித்த குணா படமும் நீண்ட இடைவெளிக்கு பிறகு பெரிய அளவில் பேசப்பட்டது. குணா படமாக்கப்பட்ட குகையில் தான் மஞ்சும்மல் பாய்ஸ் கதையும் நடந்தது. இதனால் படம் கேரளாவை தாண்டி தமிழ் நாட்டில் வெற்றி பெற்று இருக்கிறது. இதையடுத்து தமிழில் பல வருடங்களுக்கு முன் வெளியான படம் பற்றி பேசப்பட்டது.

குணாவை மீண்டும் வெளியிட வேண்டும் என்பது உள்ளிட்ட பல கோரிக்கைகள் தமிழகத்தில் எழுப்பப்பட்டு வருகின்றன. இதுதவிர அந்த படத்தில் நடித்த மற்ற நட்சத்திரங்கள் பற்றிய தகவலும் உலா வருகிறது. தமிழ் திரையுலகின் விருப்பமான ஜனகராஜ் குணா படத்தில் முக்கிய வேடத்தில் நடித்தவர். ஆனால் அந்த படத்திற்கு பிறகு ஜனகராஜும், கமல் ஹாசனும் இணைந்து நடிக்கவில்லை.

ரஜினி, கமல், சிவாஜி, சத்...