இந்தியா, ஏப்ரல் 20 -- Kalki 2898 AD Update: அமிதாப் பச்சன், கமல்ஹாசன், பிரபாஸ், தீபிகா படுகோனே மற்றும் திஷா பதானி ஆகியோர் நடித்துள்ள மிகவும் எதிர்பார்க்கப்படும் திரைப்படம் 'கல்கி 2898 கி.பி'. இந்த திரைப்படத்தின் தயாரிப்பாளர்கள் ரசிகர்களுக்கு ஒரு பெரிய அறிவிப்பை வெளியிடத் தயாராக உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

தெலுங்கு மொழியில் 'யெவடே சுப்ரமண்யம்', 'மகாநடி' போன்ற படங்களை இயக்கிய நாக் அஸ்வின் இயக்கியுள்ள 'சயின்ஸ் ஃபிக்ஷன்' வகையைச் சார்ந்த திரைப்படம், 'கல்கி 2898 கி.பி'.

இந்தப்படம் ஒரு புராண அறிவியல் புனைகதையாக இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. படத்திற்கான அனைத்து தயாரிப்புகளுக்கு மத்தியில், தயாரிப்பாளர்கள் இந்த ஞாயிற்றுக்கிழமை (ஏப்ரல் 21) 'கல்கி 2898 கி.பி' திரைப்படம் குறித்த பெரிய அறிவிப்பை வெளியிடத் திட்டமிட்டுள்ளனர் என சமூக வலைதள...