இந்தியா, மார்ச் 20 -- இந்தியா சினிமா இசையின் அடையாளமாக பார்க்கப்படும் இளையராஜாவின் வாழ்க்கை படம் உருவாக இருக்கிறது. 'இளையராஜா' என்றே பெயர் வைக்கப்பட்டு இருக்கும் இந்தப்படத்தில் இளையராஜாவாக நடிகர் தனுஷ் நடிக்கிறார்.

இந்தப்படத்தை 'சாணிக்காயிதம்', 'ராக்கி', 'கேப்டன் மில்லர்' உள்ளிட்ட திரைப்படங்களை இயக்கி கவனம் ஈர்த்த இயக்குநர் அருண் மாதேஸ்வரன் இயக்க இருக்கிறார். இந்தப்படம் தொடர்பான துவக்க விழா சென்னையில் இன்று நடைபெற்றது. இதில் கமல்ஹாசன், வெற்றிமாறன், இளையராஜா, தனுஷ் உள்ளிட்ட பல முக்கிய பிரபலங்கள் கலந்து கொண்டனர். இந்த நிலையில் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை நடிகர் தனுஷ் வெளியிட்டார்.

இந்த நிலையில் இந்தப்படம் குறித்து தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு இருக்கும் இளையராஜா, "ஆரம்பத்தில், இது என்னுடைய தனிப்பட்ட பயணமாக இருந்தது. ஆனால் இப்...