இந்தியா, ஏப்ரல் 25 -- தற்போது கோடை காலம். இந்த பருவத்தில் சோர்வு மற்றும் தாகம் எல்லோருக்கும் அதிகரித்து இருப்பது பொதுவானது. வெயிலின் உக்கிரம் அதிகமாக இருப்பதால் காலை 10 மணி முதல் மாலை 5 மணிக்கு மேல் வெளியில் செல்ல நினைக்க வேண்டிய நிலை உள்ளது. அதனால் பலரும வயிற்றைக் குளிரச் செய்ய பெரும்பாலானோர் குளிர்ந்த உணவு மற்றும் பானங்களை உட்கொள்கின்றனர். ஐஸ்கிரீம், குளிர்பானம், குளிர்ந்த ஜூஸ் போன்றவற்றின் மீது ஏங்குவது சகஜம். வெயிலின் உஷ்ணத்தால் தலைசுற்றியவர்கள் பிரிட்ஜில் வைத்த தண்ணீரை குடித்து வருகின்றனர். ஆனால், இப்படி ஃப்ரிட்ஜில் வைத்த தண்ணீரைக் குடிப்பது உடல் நலத்துக்குக் கேடு.

கோடையில் நீர்ச்சத்து குறைபாடு பிரச்சனைகள் சகஜம். எனவே உடல் நீரேற்றமாக இருக்க போதுமான அளவு தண்ணீர் குடிக்க வேண்டும். ஆனால், சிலர் குளிர்சாதனப் பெட்டியில் தண்ணீரைச் சேமித்த...