இந்தியா, ஏப்ரல் 17 -- நடிகை சுனைனா, தமிழில் குறிப்பிடும்படியான படத்தில் நடித்த நடிகையாவார். தவிர, நடிகை சுனைனா தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளிலும் நடித்துள்ளார். நடிகை சுனைனா குறித்து பேச எண்ணற்ற சுவாரஸ்யமான சம்பவங்கள் உள்ளன. வாருங்கள் பார்ப்போம்.

யார் இந்த நடிகை சுனைனா? நடிகை சுனைனா, ஹரிஷ் யெல்லா மற்றும் சந்தியா யெல்லா தம்பதியினருக்கு மகாராஷ்டிரா மாநிலம், நாக்பூரில் 1989ஆம் ஆண்டு, ஏப்ரல் 17ஆம் தேதி பிறந்தவர். இவரது மற்றொரு பெயர் ஹேமாக்சி ஆகும். நடிப்பின் மீது கொண்ட ஆர்வம் காரணமாக மாடலிங் மற்றும் சினிமாவுக்கான வாய்ப்புகளைப் பெறும் முயற்சியில் ஈடுபட்டு வந்த சுனைனாவுக்கு குமாரி vs குமாரி என்னும் தெலுங்கு படத்தில் அறிமுகம் கிடைத்தது. அப்போது அவரது வயது 16. அதன்பின், 2006ஆம் ஆண்டு, சம்திங் ஸ்பெஷல், 10ஆம் வகுப்பு என்னும் தெலுங்கு படத...