இந்தியா, ஏப்ரல் 26 -- மேஷ ராசியில் இருந்து ரிஷப ராசிக்கு பெயர்ச்சியாகும் குரு பகவான் ஐந்தாம் பார்வையாக கன்னி, ஏழாம் பார்வையாக விருச்சிக ராசியையும், ஒன்பதாம் பார்வையாக மகரத்தையும் பார்வையிடுகிறார். அக்டோபர் முதல் பிப்ரவரி வரை நான்கு மாத காலங்களில் குரு வக்கிர நிவர்த்தி அடைகிறார்.

ஸ்வாதி நட்சத்திரம் நான்கு பாதங்களும் துலாம் ராசியில் அமைந்துள்ளது. எதிர்வரும் குரு பெயர்ச்சி ஸ்வாதி நட்சத்தினருக்கு எதிர்பாராத வரவுகளை கொடுக்கும் என கூறப்படுகிறது.

ஸ்வாதி நட்சத்திரம் ராகு பகவான் ஆதிக்கத்தில் பிறந்தவர்களாக உள்ளீர்கள். கடந்த காலத்தில் குருபகவானால் சுமாரான பலன்களை தான் பெற்றீர்கள். பல்வேறு விஷயங்களில் தோல்வியை மட்டும் சந்தித்து வந்த நீங்கள் வெற்றிகளை பெறும் காலமாக குரு பெயர்ச்சி அமைகிறது.

சொத்து விஷயத்தில் இருந்த தடை நீங்கி தீர்வு கிடைக்கும் கால...