இந்தியா, ஏப்ரல் 26 -- Director Nelson Dilip Kumar About Vijay69: நடிகர் விஜயின் 69ஆவது படத்தை நெல்சன் இயக்கினால், தென்னிந்திய நடிகர்கள் யாரெல்லாம் இருப்பார்கள் என க்ளூ கொடுத்துள்ளார்.

தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திர நடிகரான விஜய் அரசியல் கட்சி தொடங்குவார் என அவரது ரசிகர்கள் பல ஆண்டுகளாக காத்திருந்தனர். அதற்கு தீனிபோடும் விதமாக, சமீபத்தில் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சி பெயரை அறிவித்து, அதைத் தேர்தல் ஆணையத்தில் பதிவும் செய்திருப்பதாக அதிகாரபூர்வமாக அறிவித்திருக்கிறார், விஜய். இதனைத் தொடர்ந்து, அவரது ரசிகர் மன்றமான தளபதி மக்கள் இயக்கம் அப்படியே, அவரது கட்சியாக மாறியது.

தமிழக வெற்றிக் கழகம் கட்சி தொடங்கப்பட்டு விட்டாலும், தமிழக வெற்றிக் கழகம் வரும் 2024 மக்களவைத் தேர்தலில் பேட்டியிடப் போவதில்லை எனவும், யாருக்கும் ஆதரவில்லை எனவும் விஜய் ...