இந்தியா, ஏப்ரல் 25 -- Bird Flu: உலகையே ஆட்டிப்படைத்துள்ள கொரோனா வைரஸின் அச்சம் தற்போது குறைந்துள்ளது. இப்போது H5N1 எனப்படும் பறவைக் காய்ச்சலின் அச்சம் மக்களிடையே ஏற்பட்டுள்ளது. உலகின் சில நாடுகளில் பறவைக் காய்ச்சல் பதிவாகியுள்ளது. அதுமட்டுமின்றி, நமது அண்டை மாநிலமான கேரளாவிலும் பறவைக் காய்ச்சல் பீதி வாட்டி வதைத்துள்ளதால், எல்லையோர மாவட்டங்கள் உஷார்படுத்தப்பட்டுள்ளன.

இந்த வைரஸ் பசுவின் பாலில் கண்டறியப்பட்டுள்ளது, முட்டை, பால் மற்றும் கோழி இறைச்சியை உட்கொள்ளும் முன் கவனமாக இருக்க வேண்டும். பாலில் பறவைக் காய்ச்சல் வைரஸ் இருப்பது கண்டறியப்பட்டதை உலக சுகாதார நிறுவனம் உறுதி செய்து எச்சரிக்கை விடுத்துள்ளது.

இந்த வைரஸ் முதன்முதலில் 1996 இல் சீனாவில் கண்டுபிடிக்கப்பட்டது, பின்னர் உலகம் முழுவதும் பரவியது. சமீப ஆண்டுகளில் பறவைகள் மற்றும் பாலூட்டிக...