இந்தியா, ஏப்ரல் 28 -- நுங்கு நீர்ச்சத்துக்கள் நிறைந்தது. இது உடலின் நீர்ச்சத்தை அதிகரிக்கிறது. இதனால், வெப்பத்தால் ஏற்படும் ஹீட் ஸ்ரோக் எனப்படும் வெப்ப வாதம் ஏற்படாமல் தடுக்கிறது. இது உடலின் வெப்பநிலையை முறைப்படுத்த உதவுகிறது.

குறிப்பாக வெயில் காலத்தில் இது உடலை புத்துணர்ச்சியுடன் வைத்துக்கொள்ள உதவுகிறது. மேலும் வெயில் தொடர்பான உபாதைகள் மற்றும் அசவுகர்யங்களையும் குறைக்கிறது.

நுங்கு செரிமானதுக்கு உதவுகிறது. இது குடல் இயக்கத்தை ஊக்குவித்து, செரிமான கோளாறுகளைப் போக்கி, மலச்சிக்கல் போன்ற பிரச்னைகளில் இருந்து உங்களை விடுகிக்கிறது.

நுங்கு, ஊட்டச்சத்துக்கள் நிறைந்த ஒன்று. இதில் உடலுக்கு தேவையான மினரல்கள் மற்றும் வைட்டமின்கள் உள்ளன. இதனால் உடலின் ஊட்டச்சத்து தேவையை பூர்த்தி செய்கிறது. மேலும் ஒட்டுமொத்த உடல் செயல்பாட்டையும் அதிகரிக்கிறது.

நுங்...