இந்தியா, மே 3 -- இயக்குநர் பாரதிராஜாவிடம் உதவியிக்குநராக இருந்தவர் மனோபாலா. இவர் ஆகாய கங்கை, பிள்ளை நிலா வெற்றி படிகள், மூன்றெழுத்தில் என் மூச்சிருக்கும் என பல படங்களை இயக்கி உள்ளார். மேலும் இவர் 200க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். அவருக்கு கல்லீரல் பிரச்னை இருந்து வந்த நிலையில் தனியார் மருத்துவமனை ஒன்றில் சேர்ந்து சிகிச்சை பெற்று வந்தார். சிகிச்சைக்குப் பின் அவர் வீட்டில் ஓய்வெடுத்து வந்த நிலையில் அவர் கடந்த ஆண்டு மே மாதம் உயிரிழந்தார்.

சென்னை சாலிகிராமத்தில் வசித்து வந்த நடிகர் மனோபாலாவுக்கு உஷா என்ற மனைவியும், ஹரிஷ் என்ற மகனும் உள்ளனர். இவர் அமெரிக்காவில் வேலை பார்த்து அங்கு பணியாற்றும் போதே ஒரு தமிழ் பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

பிரபல இயக்குநர், நடிகர், காமெடியன், தயாரிப்பாளர், யூடிபர் என பன்முகத்தன்மை கொண்ட மன...