இந்தியா, மார்ச் 10 -- கணவன் - மனைவி குடும்பத்தோடு ஒரு இடத்திற்கு சென்று வசிக்கின்றனர். அதில் மனைவியின் உடலில் ஆவி இறங்கி விடுகிறது. அவரைக் காப்பாற்ற மருத்துவரான ரஜினி வருகிறார். இது 1978 ஆம் ஆண்டு வெளியான ஆயிரம் ஜென்மங்கள் திரைப்படம்.

துரை இயக்கத்தில் 1978 ஆம் ஆண்டு வெளியான திகில் திரைப்படம் ஆயிரம் ஜென்மங்கள். லதா,விஜயகுமார்,ரஜினிகாந்த், பத்மப்ரியா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இது 1976 ஆம் ஆண்டு மலையாளத்தில் வெளியான யக்ஷகானம் படத்தின்ரீமேக் ஆகும். இப்படம் 10 மார்ச் 1978 அன்று வெளியானது.

இப்படத்தில் சாவித்திரியாக லதாவும், ரவியாக விஜயகுமாரும், டாக்டர் ரமேஷாக ரஜினிகாந்த், ராதாவாக பத்மப்ரியா, அன்னபூரணியாக மனோரமா, அழகுவாக சுருளி ராஜன், வி.கோபாலகிருஷ்ணன் டாக்டராக, ரவியின் அப்பாவாக வி.எஸ்.ராகவன், ராதாவின் அம்மாவாக புஷ்பலதா, தோட்ட ...