இந்தியா, மே 9 -- உலகநாயகன் கமல்ஹாசன் - பிரமாண்ட இயக்குநர் ஷங்கர் கூட்டணியில் பிரமாண்டமாக உருவாகி பான் இந்தியா ஹிட் படமாக மாறிய படம்தான் இந்தியன். மனிஷா கெய்ராலா, ஊர்மிளா மடோன்கர் என இரண்டு ஹீரோயின்கள், கவுண்டமணி, செந்தில், நெடுமுடி வேணு, கஸ்தூரி, சுகன்யா உள்பட பலரும் படத்தில் பிரதான கதாபாத்திரத்தில் நடித்திருப்பார்கள். படத்தில் வில்லன் என்று தனியொரு காதபாத்திரம் இல்லாவிட்டாலும், படம் முழுவதிலும் திரில் அனுபவத்தை கொடுக்கும் விதமாக உருவாக்கியிருப்பார்கள்.

சுதந்திர போராட்ட தியாகியான கமல்ஹாசன், லஞ்சத்துக்கு எதிராக குரல் கொடுப்பது, கடமையை மீறும் அரசு அதிகாரிகளை களையறுப்பதும் தான் படத்தின் ஒன்லைன். இதில் ஹைலைட்டாக லஞ்சத்துக்கு துணைபோகும் தனது மகனையும் கொலை செய்வது போல் படத்தை முடித்திருப்பார்கள்.

சுதந்திர போராட்ட வீரராகவும், நேதாஜியின் இந...