இந்தியா, மே 3 -- 22 Years Of Varushamellam Vasantham: சூப்பர் குட் ஃபிலிம்ஸ் தயாரிப்பில் பாரதிராஜாவின் மகன் மனோஜ் பாரதி மற்றும் குணால், புதுமுகம் அனிதா ஹாசநந்தனி ஆகியோர் நடித்து மே, 3, 2002ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் தான், ''வருஷமெல்லாம் வசந்தம்''. முக்கோண காதல் திரைப்படமான, இது வெளியான புதிதில் அதன் பாடல்கள் மற்றும் ஜனரஞ்சகமான கதைப்போக்கால் பலரிடம் ஈர்க்கப்பட்டது.இப்படத்தில் பழம்பெரும் நடிகர் எம்.என்.நம்பியார் மற்றும் சுகுமாரி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்து இருந்தனர். இப்படத்தினை ரவிசங்கர் எழுதி இயக்க, ராஜராஜன் ஒளிப்பதிவு செய்திருந்தார். இப்படத்தின் பாடல்கள் மற்றும் இசையினை இசையமைப்பாளர் சிற்பி செய்திருந்தார். அது தற்போதுவரை பலரால் கொண்டாடப்பட்டு வருகிறது.

வேலையில்லாத இளைஞரான ராஜாவும், நன்கு படித்த அவரது சகோதரர் ரமேஷும், தூரத்து உற...