இந்தியா, ஏப்ரல் 25 -- 10 years of Vaayai Moodi Pesavum: வாயை மூடி பேசவும், 2014ஆம் ஆண்டு, ஏப்ரல் மாதம் 25ஆம் தேதி வெளியான திரைப்படம் கலகலப்பான காதல் திரைப்படம் ஆகும். இப்படத்தின்மூலம் துல்கர் சல்மான், தமிழில் கதாநாயகனாக அறிமுகமாகிறார். உடன் நஸ்ரியா நஸிம், மதுபாலா, அர்ஜூனன், பாண்டியராஜன், காளி வெங்கட், வினு சக்கரவர்த்தி, ரோபோ சங்கர், ஜான் விஜய், ரமேஷ் திலக், ஆர்.ஜே. பாலாஜி, நக்ஷத்ரா, மைம் கோபி உள்ளிட்டப் பலர் நடித்துள்ளனர்.

இப்படத்துக்குண்டான ஒளிப்பதிவினை செளந்தரராஜன், இசையை ஷான் ரோல்டனும், எடிட்டிங்கினை அபினவ் சுந்தர் நாயக்கும் செய்துள்ளனர். இப்படம் தமிழில் எடுக்கும்போதே மலையாளத்திலும் 'சம்சாரம் ஆரோக்கியத்தினு ஹனிகாரம்' என்னும் படமாக உருவாகி ரிலீஸானது. இப்படத்தை தமிழ், மலையாளம் ஆகிய மொழிகளில் கதை எழுதி இயக்கியவர், இயக்குநர் பாலாஜி மோகன் ...