இந்தியா, ஏப்ரல் 20 -- ஒரு சிலர் ஒரே ராசி, ஒரே லக்னத்தில் பிறந்து இருப்பார்கள். ஜோதிடத்தை பொறுத்தவரை ராசி என்பது உடல் என்றால், லக்னம் என்பது உயிர் ஆகும். இது போன்ற ஜாதக அமைப்பில் பிறந்தவர்களுக்கு சாதக, பாதகங்களும் உண்டு.

சந்திரன் எந்த ராசியில் இருக்கும் போது நாம் பிறக்கிறோமோ அதுதான் ராசி, அவர் எந்த நட்சத்திரத்தில் உள்ளாரோ அதுதான் நமது ஜென்ம நட்சத்திரம்.

சூரியனின் ஒளி ஒரு நாளில் 12 லக்னங்களின் மீதும் குவிக்கப்படும். 2 மணி நேரத்திற்கு ஒரு லக்னம் என்பது இதில் தோராய கணக்காகும்.

லக்னமும், ராசியும் ஒரே கிரகத்தின் ஆதிபத்தியத்தில் வருவது என்பது அதிசயமான அமைப்பு ஆகும்.

ராசியும், லக்னமும் ஒன்றானால் அந்த கிரகத்தின் வலிமை அதிகப்படியாக உங்களுக்கு கிடைக்கும். தெளிவான சிந்தனைகள், செயல் திறன், தீர்க்கமாக முடிவெடுத்தல் ஆகிய குணாதிசயங்கள் இருக்கும்.

தன...