இந்தியா, ஏப்ரல் 28 -- நவக்கிரகங்களின் இளவரசனாக விளங்க கூடியவர் புதன் பகவான். இவர் புத்திசாலித்தனம், பேச்சு, கல்வி, வியாபாரம், படிப்பு உள்ளிட்டவைகளுக்கு காரணமாக திகழ்ந்து வருகின்றார். புதன் பகவான் நவகிரகங்களில் மிகவும் இளைய கிரகமாக விளங்கி வருகின்றார். இவர் மிதுனம் மற்றும் கன்னி ராசிகளின் அதிபதியாக திகழ்ந்து வருகின்றார். புதன் பகவான் மீன ராசியில் வக்கிர நிலையில் பயணம் செய்து வந்தார்.

இந்நிலையில் புதன் பகவான் கடந்த ஏப்ரல் 19ஆம் தேதி அன்று மீன ராசியில் உதயமானார். புதன் பகவானின் உதயத்தால் தடைபட்டுக் கிடந்த சில நற்பலன்கள் சில ராசிகளுக்கு கிடைக்க உள்ளன. புதன் பகவானின் அனைத்து விதமான செயல்பாடுகளும் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். தற்போது மீன ராசியில் உதயமாகி பயணம் செய்து வரும் புதன் பகவானால் சில ராசிகள் அதிர்ஷ்டத்தை அனு...